புதிய தலைமுறை - எவ்வளவு அடிச்சாலும் தமிழன் தாங்குவான்...

Generating Download Links...

எவ்வளவு அடிச்சாலும் தமிழன் தாங்குவான் அப்படின்னு நினைப்பதே தவறு.. கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம் செய்வோம்.. செய்தும் காட்டியுள்ளோம்.. ஆர்ப்பரிக்கும்...

Posted 5 years ago

Kandhavel Uthiramurthi 5 years ago

எங்கே? எங்கே? எங்கே? எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க
ஆலங்குச்சி
எங்கே

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய
நடை வண்டி
எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த
பின்னல் கூடை
எங்கே ?

பனை ஓலை குடிசைகள்
எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?

குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த
சிறுதானியம்
எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால்கிலோ கடுக்கன்
சுமந்த காதுகள்
எங்கே ?

நல்லது கெட்டது
சுட்டிக்காட்டும்
பெரியவர்கள்
எங்கே?

தோளிலும் இடுப்பிலும்
சுமந்த
பருத்தி துண்டு
எங்கே ?

பிள்ளைகளை சுமந்த
அம்மாக்களும்
எங்கே ?

தாய்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள் பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?

சுத்தமான நீரும்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழு
ஆயுள் நமக்கு
எங்கே?

சிந்திக்க நமக்கு
நேரம் தான்
எங்கே???
எங்கே???

இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்ற அவசர பயணம் தான் எங்கே ?

Ffairoz Khan 5 years ago

Tamilanda.

Muthu Reddy 5 years ago

நன்றி

Abdul Kather Oli 5 years ago

நெத்தடி!!!!!!அரசியல்வாதி சொல்றத இனிமேல் எந்த ஒரு இளைய சமுதாயம் கேட்டு கொண்டு இருக்காது.

Amul Luma 5 years ago

திரும்ப அடிச்ச ந

Abdul Kather Oli 5 years ago

என் இளைஞர் கூட்டமே !
இது போல் ஓர் மாபெரும் போராட்டம் இனி நடப்பது மிக கடினம் ! கலைத்து விடாதே போராட்டத்தை !

ஜல்லிக்கட்டிற்கு அணுமதி தருவதாக அறிவித்து விட்டார்கள் !
பீட்டாவிற்கு யார் தடை போடுவார்கள் !

காவேரியில் யார் தண்ணீர் வாங்கி தருவார்கள் !

கச்சத்தீவு யார் மீட்பார் !

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு யார் காண்பார்*

விவசாயிகளின் தற்கொலை யார்
தடுப்பார் !

அணுஉலை யார் மூடுவார் !

விட்டு விடாதே போராட்டத்தை !

கோரிக்கைகளை அடுத்தடுத்து வையுங்கள் !

இது அனைத்து அனைத்து போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் தெரிவியுங்கள் !

- உங்களில் ஒருவன்....

Raje Guna 5 years ago

புலியையே மொரத்தால அடிச்சு துரத்திய வீர மண்ணுல...தமிழர்களின் குரலால முயல அடிச்சு துரத்துவோம்ல...

Abdul Kather Oli 5 years ago

தமிழனை தமிழனாய் தலைநிமிறச்செய்த செயல்
சல்லிக்கட்டு விவகாரத்தில் நமக்கு பல விஷயங்கள் கற்று கொடுத்துள்ளார்கள்.அவை
1. திரையில் தோன்றும் பொய்யான நடிகர்கள் பின்பு சென்றது தவறு என்று புரிய வைத்துள்ளனர் .
2. அரசியல் என்று தலைவர்களின் பொய்யான சூளுரைகளை கேட்டது தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
3. தொலைகாட்சிகள் நம்மை எதற்காக பயன்படுத்தினர் என்று புரிய வைத்துள்ளனர்.
4. தமிழனின் பொருள்களை வாங்காமல் அன்னிய நாட்டின் பொருள்களை வாங்கியது எவ்ளோ பெரிய தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
5. தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் யார் நமக்காக வந்தார்கள் என்று புரிய வைத்துள்ளர்கள்.
6. இந்திய நாட்டில் தமிழனின் நிலை என்ன என்று தமிழனுக்கு தெளிவாக புரிய வைத்துள்ளார்கள் .
7. இன்று ஒரு விஷயத்தை அலட்சியம் செய்தால் அதன் விளைவு பிற்காலத்தில் எப்படி அமையும் என்று புரிய வைத்துள்ளார்கள் .
8. தமிழன் என்றால் யார் ? அவனால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக நினைத்தவர்களுக்கு இன்று நாம் யார் என்று புரியவைத்துள்ளோம் .
9. வளரும் சந்ததியர்களுக்கு நாம் முதலில் என்ன கற்று தரவேண்டும் என்று புரிய வைத்துள்ளனர்.
10. தமிழ் மொழியினை அலட்சியம் செய்ததன் விளைவு தான் இன்று நாம் சந்திக்கும் இந்த தமிழனின் கலாச்சாரத்தினை அழிப்பதற்கான காரணம் என்று புரிய வைத்துள்ளனர்.
தமிழா ! இது வரை நாம் யார் ? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தோம்.ஆனால் இன்று நாம் யார் என்ற கேள்விக்கு உலகமே பதில் சொல்லும் அளவிற்கு நாம் சென்றுள்ளோம். நமக்கு ஒரு பிரச்சினை என்ற உடன் யார் வந்தார்கள் என்று சிந்தித்து பார் , அவர்கள் நமக்கு வேண்டுமா ? அன்னிய நாட்டின் பொருள்கள் , நம்மை முட்டாளாக ஆக்கி கொண்டிருந்த ஊடகங்கள் , ஆங்கில மொழி , என அனைத்தையும் நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும். எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்ற நிலை வந்தால் நிச்சயமாக தமிழன் தலை நிமிர்ந்து உலகை ஆள்வான்.
நன்றாக சிந்தியுங்கள் இந்த தொகுப்பை படிப்பவர்கள் தயவு செய்து நல்லதை எடுத்து கொண்டு , இன்னும் ஏதேனும் சேர்க்க வேண்டுமாயின் அதனை சேர்த்தும்,நீக்க வேண்டியதை நீக்கியும் பகிருங்கள். நாம் யார் என்பதை நாம் தான் மற்றவர்களுக்கு கூற வேண்டும் . வாழ்க தமிழ் !

Mahendra Prabhu 5 years ago

Abdul Kather Oli 5 years ago

எங்கே? எங்கே? எங்கே? எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க
ஆலங்குச்சி
எங்கே

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய
நடை வண்டி
எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த
பின்னல் கூடை
எங்கே ?

பனை ஓலை குடிசைகள்
எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?

குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த
சிறுதானியம்
எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால்கிலோ கடுக்கன்
சுமந்த காதுகள்
எங்கே ?

நல்லது கெட்டது
சுட்டிக்காட்டும்
பெரியவர்கள்
எங்கே?

தோளிலும் இடுப்பிலும்
சுமந்த
பருத்தி துண்டு
எங்கே ?

பிள்ளைகளை சுமந்த
அம்மாக்களும்
எங்கே ?

தாய்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள் பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?

சுத்தமான நீரும்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழு
ஆயுள் நமக்கு
எங்கே?

சிந்திக்க நமக்கு
நேரம் தான்
எங்கே???
எங்கே???

இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்ற அவசர பயணம் தான் எங்கே ?